இரண்டு ஏரிகள் – ஒரு அதிர்ச்சி உண்மை!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீபத்திய அறிக்கை ஒரு மறைக்க முடியாத உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
🛑 *மாடம்பாக்கம் ஏரி – உயிரிழக்கிறது!*
தொடர்ந்து மாசுபட்ட/ கழிவுநீர் உள்செல்வதால், ஏரியின் கரைந்த ஆக்சிசன் (DO) அளவு 0 – அதாவது உயிர்னங்கள் வாழ முடியாத நிலை.
E.Coli அளவு மிக மோசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் தொடர்ந்து புகாரளிக்கப்பட்டும், எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
✅ *சிட்லப்பாக்கம் ஏரி* – மீண்டுவரும் நம்பிக்கையின் காட்சி!
DO அளவு 8.3 – இது உயிரனங்கள் வாழ உகந்த சூழல்.
ஏரியின் மேற்குப் பகுதியில் கூட E.Coli அளவுகள் கணிசமாக குறைந்துள்ளன, காரணம்: கழிவுநீர் வழிநடத்தப்பட்டு தடுப்பு செய்யப்பட்டது.
🔧 *மாற்றத்தைக் கொண்டுவந்த 4D முறை* !
நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திய 4D முறைகள் (Deflecting, Draining, Desilting, Deepening) மாற்றத்தை நிரூபித்துள்ளன.
இது வெறும் கோரிக்கையல்ல, தகவல் ஆதாரத்துடன் கூடிய வெற்றிகரமான முறை.
💧 *நம் ஏரிகள் மீண்டும் குடிநீர் ஏரிகளாக மாறவேண்டும்* – பொறியியல் மூலம்!
நகர்ப்புற கழிவுநீர் வடிகால் திட்டம் (UGD) முழுமையாக நிறைவேறும் வரை,
இந்த 4D நடைமுறைகள் அவசியமான குறைந்தபட்ச நடவடிக்கையாகத் தொடர வேண்டும்.
⚠️ *இனி கூட விழிக்கவில்லை என்றால்…* நமது வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் துறைசார்ந்த அனைத்து அலுவலகங்களுடன் இணைந்து, உடனடி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
நாள்கள் அல்ல – ஆண்டுகள் வீணாகிவிட்டன.
இனி தாமதிக்க கூடாது!
🗣 *அரசு அமைப்புகள் செவிகொடுங்கள்!*
Greater Chennai Corporation
Tambaram Corporation
WRD & CMDA
👉 *உடனடியாக சேர்ந்து செயல்படுங்கள்* – இனியும் ஏரிகளை இழக்க அனுமதிக்க கூடாது!
📌 குறிப்பு: TNPCB பரிசோதனை அறிக்கை – கருத்துப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
#சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு சிட்லபாக்கம் பகுதியில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பைகளை தவிர்க்கும் விதமாக கழக நிர்வாகிகளுக்கு துணிப்பைகளை வழங்கிய தருணம்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *மாணவர் கல்வி கடன் ரத்து செய்யப்படும்*. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக *ரூபாய் 2-லட்சமும்* , ஜல்லிக்கட்டில் வீரர்கள் அசம்பாவிதமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு *ரூபாய் 10- லட்சமும் வழங்கப்படும்*... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்