தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பீர்க்கங்கரணை ஸ்ரீ சக்தி நகர் 5-வது தெருவில் கழிவு நீர் கால்வாய் சீர்கேடு – நோய் பரவும் அபாயம்
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பீர்க்கங்கரணை ஸ்ரீ சக்தி நகர் 5-வது தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
கால்வாய் முழுவதும் குப்பைகளால் நிரம்பி, கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுற்றுப்புற சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தூர் வாரப்படாத கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவதாகவும், இதன் காரணமாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசு மூலம் பரவும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே மக்கள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அபாயமும் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவு நீர் கால்வாயை முழுமையாக தூர் வாரி சுத்தம் செய்து, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில், கூலிப்படை Network, போதைப்பொருள் Network, தற்போது துப்பாக்கி Network என இவை அனைத்தையும் வளர விட்டிருப்பது யார்? இன்றைய Failure Model திமுக முதல்வர் தானே? துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. அதுவும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏதோ புடவை விற்பது போல Assault-ஆக துப்பாக்கி விற்கும் அளவிற்கு எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வருகிறது? இதுபோன்ற செய்திகள் எல்லாம், இந்த திமுக ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாட முடியும்? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. "உலக நாடுகளுடன் தான் நமக்கு இனிமேல் போட்டி" என்று ஒரு திமுக அமைச்சர் சொன்னாரே- எதில்? Crime Nexus, Gun Network, Drug Mafia... இதில் தானே? அதிலும் சகல நெட்வர்க்கிலும் உச்சியில் நின்று ஆட்டிப் படைப்பது திமுக-வினர் தான் என்பது தான் இதில் Highlight...!! மக்களின் உயிரைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல், துப்பாக்கி கலாச்சாரத்தை வளர வைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம். கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி உட்பட, குற்றத்தில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம். இன்னும் 3 மாதங்களில் அமையவுள்ள All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) ஆட்சியின் முதல் பணியாக, சட்டம் ஒழுங்கைக் காக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு அளிக்கிறோம். மக்களைக் காப்பதே அரசின் முதல் கடமை! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு நகர கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான தம்பி திரு.அனிருத் அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கையில் ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்த திமுகவினர் திரு.அனிருத் சென்ற காரை வழிமறித்து காரில் இருந்த கொடிக்கம்பம் மற்றும் கண்ணாடியை உடைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த திரு.அனிருத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சாதாரணமாக மாநகராட்சி அதிகாரிகள் கையில் பேனா, பேப்பர், அரசாங்க ஏடு உள்ளிட்டவை வைத்திருப்பர். ஆனால் விடியா ஆட்சியில், அதிகாரிகள் தெலுங்கு பட வில்லன்களை போல், கையில் கத்தி, கடப்பாரை, பிக்காசு உள்ளிட்டவைகளுடன், மென்மையான முறையில் வரி வசூல் செய்யும் அற்புத காட்சி!